5-வது தூணின் மாத இதழ்
  • இயக்க செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல...
  • லஞ்சம் வாங்குபவருக்கு இனி அது முடியாது என்பதை உணர்த்திட...
  • லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு உண்டாக்க...
மே 2009 முதல் உதயமாகி உள்ள எங்களது “மாற்றம்" என்ற மாத இதழ், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களையும் சென்று சேரும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய அம்சங்களுடன் அனைவரையும் கவரும் விதத்தில் 5-வது தூணின் மாத இதழ் வெளிவர இருக்கிறது.

லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றி, வெளிப்படையான - நேர்மையான அரசாங்கத்தை உடைய வளமிக்க நாடாக உருவாக்க ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே முடியும். அந்த மாற்றத்தைக் கொண்டுவர நிச்சயம் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்று 5-வது தூண் நம்புகிறது.

லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற 5-வது தூணின் “மாற்றம்" என்ற மாத இதழில் விளம்பரம் செய்ய
தொடர்பு கொள்ள - R.சந்தோஷ்குமார், செய்தி மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர், 5-வது தூண், இ-மெயில்: press@5thpillar.org
09.05.2009 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகளுக்குப் பின்பு 5-வது தூணின் தலைவர் விஜய் ஆனந்த் விழாவின் முக்கிய விருந்தினர்களையும், அலுவலக நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினார்.விழாவில் ஏ.கே.வேங்கடசுப்பிரமணியம் இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள், மாற்றம் மாத இதழின் முதல் பிரதியை வெளியிட்டு முக்கிய விருந்தினர்களுக்கு பிரதிகளை வழங்கினார்.விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் பேசிய டிராஃபிக் ராமசாமி ‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இளைஞர்கள் அவர்களை தட்டிக் கேட்கின்ற அளவிலே மாற்றம் ஏற்பட வேண்டும்’ என்று கூறினார். அடுத்துப் பேசிய ஃபுட்கிங் முதன்மை செயல் அலுவலர் சரத்பாபு, பசுமையான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வேணு அர்விந்த், மாற்றம் பத்திரிகை ஒரு மருத்துவர் போல சமூகத்திலுள்ள லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என கூறினார்.

அடுத்துப் பேசிய ஊழல் ஒழிப்பு இயக்க பொதுச் செயலாளர் எஸ்.எம். அரசு, சமுதாயத்தில் செயலாற்றும் நான்கு தூண்கள் மற்றும் 5-வது தூணின் அவசியம் பற்றி விளக்கிப் பேசினார். தொடர்ந்து பேசிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் தமது உரையில் இந்த மண்ணிலே பிறந்த நாம், நமது தாய் மண்ணிற்கும் நாட்டுக்கும் தேசப் பற்றோடு பணிசெய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

விழாவின் இடையே ஆசிரியர் குழுவினரை விஜய் ஆனந்த் அறிமுகப்படுத் தினார். 5-வது தூண் அமைப்பின் துணைத் தலைவர் (செயல்பாடு மற்றும் நிர்வாகம்) குமரன் அனைவருக்கும் நன்றி கூற விழா இரவு 9 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
 
லஞ்ச ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற 5-வது தூணின் “மாற்றம்" என்ற
மாத இதழ் மே 09/2009 முதல் உதயமாகி உள்ளது


 
டிசம்பர் - 2010
நவம்பர் - 2010
அக்டோபர் - 2010
செப்டம்பர் - 2010
ஆகஸ்ட் - 2010
ஜூலை - 2010
ஏப்ரல் - 2010
ஜூலை - 2009
ஜூன் - 2009
மே - 2009